தமிழ் (tamiḻ)

IBA Montage

2025 (22 வது வருடம்) ஆண்டிற்கான சர்வதேச வர்த்தக விருது, உலகின் உயர் மதிப்பான வர்த்தக விருதுக்காக உங்கள் நிறுவனத்தின் பதிவை சமர்ப்பிக்க அழைக்கிறோம்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே சமர்ப்பித்தால், எவ்வாறு தயார்செய்வது மற்றும் உங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பது தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கிய நுழைவுத் தகவல் பட்டியலை மின்னஞ்சலில் அனுப்புகிறோம். மிகவும் கண்டிப்பான தனியுரிமைக் காப்புமுறையை நாங்கள் பின்பற்றுவதால், எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரி வேறு யாரிடமும் பகிரப்படாது.

 

 

இந்தத் தளத்தின் இந்தப்பக்கம் மட்டுமே இந்த மொழியில் நீங்கள் காணமுடியும். நுழைவுத் தகவல்பட்டியல் உட்பட, மற்ற பக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். இதற்குக் காரணம், பரிந்துரைகள் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சர்வதேச அளவில் தொழில் வல்லுநர்கள் மதிப்பிடும் செயலோட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே.

 

சர்வதேச தொழில் விருதுகள் பற்றி

உலகளாவிய விருது நிகழ்ச்சிகளில் சர்வதேச தொழில் விருதுகள் மட்டுமே பணியிடத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் அவற்றின் சாதனைகளையும் அங்கீகரிக்கும் ஒன்றாக உள்ளது. விருதுகளை வழங்கும் தி ஸ்டீவி அவார்ட்ஸ் (The Stevie Awards) அமைப்பானது ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்று. எட்டுவித ஸ்டீவி விருதுப் போட்டிகளை நடத்தும் எங்களைப் பற்றி www.StevieAwards.com என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம். தி ஸ்டீவி விருதுப் பதக்கம் உலகில் அதிகம் விரும்பப்படும் பரிசுகளில் ஒன்றாக உள்ளது.

2024 ஆம் ஆண்டில், 60 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சர்வதேச ஸ்டீவி விருதுகளைப் பெற்றுள்ளனர். 2024 பதிப்பில் வெற்றியாளர்களின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்க.

 

வகைகள்

சர்வதேசத் தொழில் விருதுகளில் பல்வேறு விருது வகைகளைத் தேர்வுசெய்யலாம். நீங்கள் பங்கேற்க வேண்டுமானால், உங்கள் நிறுவனம் எந்தச் சாதனைகளுக்கான அங்கீகாரத்தை எதிர்நோக்குகிறதோ அதற்குப் பொருத்தமான வகையினத்தைத் தேர்வுசெய்து, அந்த வகையினத்துக்கான உங்கள் பரிந்துரைகளை அறிவுறுத்தப்பட்டபடி தயாரிக்கவும். வகையினங்கள் கீழே:

  • இந்த ஆண்டின் சிறந்த நிறுவன விருதுகள்
  • மக்கள்தொடர்பு விருதுகள்
  • வாடிக்கையாளர் சேவை விருதுகள்
  • மனித வள விருதுகள்
  • தகவல்தொடர்பு விருதுகள்
  • மேலாண்மை விருதுகள்
  • சந்தைப்படுத்தல் விருதுகள்
  • இணைய விருதுகள், வருடாந்திர அறிக்கை விருதுகள், நிகழ்வு விருதுகள் மற்றும் காணொளி விருதுகள் உள்ளிட்ட அனைத்துவகை ஊடக வடிவங்களுக்கும்
  • தொழிற்திறன் விருதுகள்
  • புதிய பொருள் விருதுகள்

 

நுழைவுத் தகவல்பட்டியலில் வகையினப் பட்டியல், அதன் விபரங்கள், ஒவ்வொன்றுக்கும் சமர்ப்பிக்கத் தேவையானவை, நுழைவுக்கான இறுதிவரம்பு மற்றும் ஏதேனும் நுழைவுக் கட்டணம் அவசியமெனில் அதன் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

பெரும்பான்மையான பிரிவுகளில் உங்களின் விருப்பம் போல் உங்களின் நிறுவனம் அல்லது தனிநபரை பற்றிய (5) நிமிட காணொளி அல்லது உங்கள் பிரிவுகளின் கேள்விகளுக்கான விடைத்தாள்களை சமர்ப்பிக்கலாம்

 

விருதுகள்

2025 சர்வதேச ஸ்டீவ் விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அறிவிக்கப்படும். அடுத்ததாக , ஸ்டீவ் விருதுகளுக்கான கோப்பைகள்  மற்றும் வெள்ளி பதக்கங்கள் மற்றும் வெங்கல  பதக்கங்கள் அக்டோபரில் ஐரோப்பாவில் நடைபெறும் ஒரு  நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

 

தொடர்புகள்

சர்வதேச தொழில் விருதுகள் அல்லது பிற ஸ்டீவி விருது நிகழ்ச்சிகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளவும்.

The Stevie Awards
10560 Main Street, Suite 519
Fairfax, Virginia 22030, USA
தொலைபேசி: +1 703-547-8389
தொலைநகல்: +1 703-991-2397
மின்னஞ்சல்: help@stevieawards.com